இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுவூற்று பிரதேசத்தில் நேற்று(08.06.2026) மாலை இரு சிறியரக லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
கிண்ணியாவில் இருந்து நடுவூற்று பகுதிக்கு நெல் ஏற்றுவதற்காகச் சென்ற லொறியின் சாரதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
கொழும்பில் உணவகமொன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து! மூவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதி
ஆரம்பகட்ட விசாரணைகளில்
காயமடைந்தவர் கிண்ணியா, காக்காமுனை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முகம்மது மர்சூர் (மௌலவி) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தற்போது சிகிச்சைக்காக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து விதிகளுக்கு மாறாக, அதிவேகமாகவும் அலட்சியமாகவும் வாகனத்தை செலுத்தி இவ்விபத்தை ஏற்படுத்திய மற்றைய லொறியின் சாரதி கிண்ணியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த வேளையில், கைது செய்யப்பட்ட சாரதி அதிகளவில் மதுபானம் அருந்தியிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

