உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள் மீட்பு
கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகளை பொலிசார் மீட்டுள்ளனர்.
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மோதர நிபுண என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் சகோதரரான மோதர சதுரவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இது தொடர்பான தகவல் பொலிசாருக்குக் கிடைத்திருந்தது.
இந்த சந்தேக நபர் சமீபத்தில் துபாயில் இருந்து நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். அவர் தற்போது 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
விசாரணையின் போது கிடைத்த தகவல்களின்படி, முகத்துவாரத்தில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
அண்மையில் தெமட்டகொடவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 18 துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருந்தது.

அதனையொத்த மாதிரியிலான இரண்டு கைத்துப்பாக்கிகளே தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முகத்துவாரம் பகுதியில் இருந்த மீட்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தத் துப்பாக்கிகள் அனைத்தும் ஒரே நபரால் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதற்காக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCIB) இது தொடர்பான மேலதிக மீது விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
பொலிசாரினால் துப்பாக்கிகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படுவதால், குற்றவாளிகளிடையே துப்பாக்கிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
என்றும், அதன் விளைவாக, அவர்கள் நாட்டிலேயே துப்பாக்கிகளைத் தயாரிக்க முயன்று வருவதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது என்றும் ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.