மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு இடங்களில் காட்டு யானை தாக்கி இருவர் பலி
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் மியான்கல் வயல் பகுதியில் வயலில் அமைக்கப்பட்டிருந்த பரணில் காவலில் ஈடுபட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
இதன்போது திருவேம்பலம் சோமலிங்கம் (வயது 64) என்பவரே நேற்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும்,உடற்கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் பழைய சந்தை வீதி சித்தாண்டி 4 எனும் கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை தயாபரன் (வயது 34) என்பவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள லாவாணை எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. இவர் தனது வயல் வாடியிலிருந்து இன்னொரு வயல் வாடிக்கு காலை உணவுக்காகச் சென்றுகொண்டிருக்கும் போது காலை 6.45 மணியளவில் குறுக்கிட்ட காட்டு யானை இவரைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam