கொழும்பில் இருவர் பலி! காரணம் வெளியானது (Video)
கொழும்பு - வெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு வெவ்வேறு புகையிரதங்களில் மோதியே அந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் பெலியத்தையிலிருந்து மருதானை வரை பயணித்த காலுகுமாரி சீக்ரகாமி புகையிரதத்தில் மோதி 43 வயதுடைய இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதேபோன்று ராமகிருஷ்ணா வீதிக்கு அருகில் புகையிரத கடவையில் கொழும்பிலிருந்து தெஹிவளை நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி 48 வயதுடைய வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri