மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றால் 24 மணித்தியாலயத்தில் இருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கோவிட் தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் 229 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை126 ஆகவும், கோவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 8539 ஆகவும் அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.
மேலும்,பட்டிருப்பு சுகாதார அதிகாரி பிரிவில் ஒருவரும், கோறளைப்பற்று சுகாதர அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட இருவர் கடந்த 24 மணித்தியாலயத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை ,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் கீழ் உள்ள பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவுகளான சுகாதார அதிகாரி பிரிவுகளான மட்டக்களப்பில் 43 பேரும், காத்தான்குடியில் 33 பேரும், வாழைச்சேனையில் 7 பேரும், ஓட்டுமாவடியில் ஒருவரும், செங்கலடியில் 93 பேரும், கோறளைப்பற்று மத்தியில் ஒருவரும், ஏறாவூரில் 4 பேரும், வவுணதீவில் 23 பேரும், வெல்லாவெளியில் 17 பேரும், ஆரையம்பதியில் 2 பேரும், கிரானில் 5 பேர் உட்பட 229 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து மாவட்டத்தில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 8539 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து 1233 பேர் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam