யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பகுதிகள்! - இராணுவத் தளபதி அறிவிப்பு
யாழ்ப்பாணம் உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களில் உள்ள கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கிராம சேவகர் பரிவின் கள்ளித்தெரு மற்றும் கல்வந்தாழ்வு பகுதியும், கண்டி மாவட்டத்தின் சுதுஹம்பல மேற்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள வேலமத பரணகம பகுதியும், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் கிராம சேவகர் பிரிவின் மத்திய பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறியதற்காக 403 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறியதற்காக இதுவரை 45,935 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேற்கு மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 107 நபர்கள் நேற்று 59 வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 15 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
