ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயம்
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிள்,பட்டா ரக வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒமந்தை, பன்றிகெய்தகுளம் ஏ9 பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பன்றிகெய்தகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்களின் பின்புறமாக வந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில், ஓமந்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan