மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம் - பெண்ணின் நிலை கவலைக்கிடம்
திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி 96ம் கட்டை சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
96ம் கட்டை சந்தியில் மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் தம்பலகாமம்-கல்மெடியாவ பகுதியைச் சேர்ந்த இந்திராணி சுவர்ணலதா (30 வயது) படுகாயம் அடைந்துள்ள நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த முள்ளிப்பொத்தானை-யூனிட் 07 பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.சியாத் (22வயது) காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் தம்பலகமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri