மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம் - திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (20) 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் தம்பலகாமம் -ஈச்ச நகர்ப் பகுதியைச் சேர்ந்த எம்.உசன் இஸ்ஸத்கான் (38 வயது) மற்றும் முள்ளிப்பொத்தானை- யூனிட் 07யைச்சேர்ந்தஎம்.
எஸ். எம்.ரிஷான் (30வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, திருகோணமலை நகர்ப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் தொழில் புரிந்து வரும் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது தம்பலகாமம் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த இருவரையும் 19 90 அவசர ஆம்புலன்ஸ் வண்டி மூலமாகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் இவர்கள் இருவரும் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 14 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
