சாரதி பயிற்றுவிப்பு முச்சக்கரவண்டியுடன் மகிழுந்து மோதி விபத்து: இருவர் படுகாயம்
தலவாக்கலையில் இருந்து கொட்டகலை வரை சாரதி பயிற்றுவிப்பு பாடசாலை ஒன்றினால் முச்சக்கரவண்டி ஒன்றுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த போது மகிழுந்து ஒன்று குறித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது பயிற்சியில் ஈட்டுப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு ஆண்கள் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலையில் இருந்து கொட்டகலை வரை பயிற்சிக்காகப் பயன்படுத்திய முச்சக்கரவண்டி, கொழும்பு கடுவலையில் இருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற மகிழுந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மகிழுந்துடன் மோதுண்ட முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது.
இதன்போது குறித்த செய்தியைச் சேகரிக்கச் சென்ற எமது ஊடகவியலாளர் மகிழுந்தில் பயணித்த பெண் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் திம்புள பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.







இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
