இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கடந்த மாதம் 20 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 6 இந்திய கடற்றொழிலாளர்கள் 4 பேருக்கு ஆறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறை தண்டனை வழங்கி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கினை ஆராய்ந்த நீதவான் 6 பேரில் 4 பேருக்கு ஆறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறை தண்டனை வழங்கி நிபந்தனயுடன் விடுதலை செய்தார்.
ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை
இந்த 6 பேரில் இருவர் படகோட்டிகள் என்பதால் அவர்களுக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டிருந்தது.
அத்துடன் படகோட்டிகள் இருவருக்கும் தலா நான்கு மில்லியன் ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டது.
இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.
கடந்த மாதம் 20 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த போது இரு படகுகளுடன் கடற்படையினர் இவர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
