மூதூரில் இரு கைக்குண்டுகள் மீட்பு!
மூதூர்- நெய்தல் நகர் மையவாடி வீதியில் புதைக்கப்பட்டிருந்த நிலைமையில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(4..6.2026) இடம்பெற்றுள்ளது.
நெய்தல் நகர் பகுதியில் தற்போது வீதிப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் போது, வீதியோரமாகப் போத்தல் ஒன்றில் அடைக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த இரண்டு கைக்குண்டுகளும் தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இதனைத் தொடர்ந்து, வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் உடனடியாக இது குறித்து மூதூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அப்பகுதிக்கான பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.

மீட்கப்பட்ட கைக்குண்டுகளைச் செயலிழக்கச் செய்வதற்காக, நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக் கொண்ட பின்னர் விசேட அதிரடிப்படையினரின் (STF) உதவியுடன் அவற்றை முழுமையாக மீட்டுச் செல்வதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


