இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் -கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்
மாத்தளையில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பலாபத்வல பகுதியிலுள்ள ஒரு வீட்டில் இரு தரப்பினரிடையே நேற்று ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாத்தளை, பலாபத்வல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடும் மோதல்
நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் வீடொன்றுக்கு சென்ற நிலையில், அந்த வீட்டுக்காரர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வீட்டில் இருந்த ஒருவர் அருகிலுள்ள கூர்மையான ஆயுதத்தால் ஒருவரின் கழுத்தில் தாக்கியதுடன், மற்றொரு நபரை வெட்டி காயப்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
காயமடைந்தவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




