கொழும்பில் இரு குழுக்களுக்கிடையே மோதல் - ஒருவர் பலி - ஆபத்தான நிலையில் மற்றுமொருவர்
கொழும்பின் புறநகர் பகுதியான மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மற்றுமொருவர் கடும் காயமடைந்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸ் குழுவொன்று ஸ்தலத்திற்கு சென்றுள்ளனர்.
வெட்டுக் காயம்
பொலிஸார் சம்பவ இடத்தை சென்றடையும் போதே நபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் வீதியில் வீழ்ந்த கிடந்துள்ளார்.
அந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதலில் ஈடுபட்ட மற்றுமொரு 28 வயதுடைய இளைஞர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.