கனடாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு நண்பர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
கனடாவினை சேர்ந்த நண்பர்கள் இருவர் அதிர்ஷ்டலாப சீட்டின் மூலம் 1 மில்லியன் டொலரை பரிசாக பெற்றுள்ளனர்.
வான்கூவரை சேர்ந்த வாய் ஹிங் யுவன்(Wai Hing Yuen) மற்றும் டாங் மெய் டெங்(Tang Mei Deng) என்ற இரண்டு நண்பர்கள் இணைந்து இந்த அதிர்ஷ்டலாப சீட்டினை வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினமான நேற்று(25.12.2024) அவர்களுக்கு பணப்பரிசு கிடைத்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா
கடந்த 11ஆம் திகதி குறித்த சீட்டு வாங்கப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான அறிவிப்பால் நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து, நண்பர்களுடன் குழுவாக வெளிநாட்டு சுற்றுலா பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டு நண்பர்களும் இணைந்து அதிக அதிர்ஷ்டலாப சீட்டுக்களை வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |