ஹெரோயின் போதைப்பொருளுடன் மீன் வியாபாரிகள் இருவர் கைது
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யான் ஓயா பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் வாகனங்களைச் சோதனையிட்ட போது ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு மீன் வியாபாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் - திருகோணமலை பிரதான வீதி யான்ஓயா பகுதியில் பொலிஸார் இன்று (20) காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பொறுப்பதிகாரி லக்மால் விஜயரத்னவின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ரோஹன குமார மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது குறித்து இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களிடம் இருந்து 1150 மில்லிகிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வென்னப்புவ மற்றும் மாரவில பகுதியைச் சேர்ந்த 38, 40 வயது உடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.
வென்னப்புவ பிரதேசத்திலிருந்து திருகோணமலைக்குக்
கடல்மீன் எடுப்பதற்காக லொறியில் வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் கெப்பித்திக்கொள்ளாவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan