முல்லைத்தீவில் உழவியந்திரம் பயன்படுத்திய கடற்றொழிலாளர்கள் இருவர் கைது!
இலங்கையில் கரைவலை இழுப்பதற்கு உழவு இயந்திரங்கள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம்(02) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு - செம்மலை கடற்கரைப்பகுதியில் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை இழுக்கும் போதே இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
இரண்டு உழவு இயந்திரங்களும், கரைவலை தொழில் செய்த எட்டு பேரையும் ஏற்கனவே கைதுசெய்ய கடற்படையினர் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரத்தினை பயன்படுத்தி கரைவலை இழுக்கும் நடவடிக்கையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்டத்தில் உள்ள கடற்படையினர் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு முன்னரும் இவ்வாறான கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.