மட்டக்களப்பில் போதைப் பொருள் வியாபாரிகள் இருவர் கைது
ஏறாவூர் ,காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாாரங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(23.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸார் நேற்று இரவு ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஒரு குழுவும் காத்தான்குடி பகுதியில் ஒரு குழுவுமாக ஒரே நேரத்தில் வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
கைது
இந்த நிலையில் காத்தான்குடி எப்.சி. வீதியில் வியாபாரத்துக்காக போதை பொருளை எடுத்துக் கொண்டு சென்ற 26 வயதுடைய வியாபாரியை சுற்றிவளைத்து 10 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

அதேவேளை ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வீதியில் வைத்து அந்த பகுதியில் ஆடைகள் தைக்கும் கடையான ஈஸ்ரன் ரெய்லர் செப்பின் உரிமையாளரான வியாபாரியை 110 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.
மேலதிக விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு வியாபாரிகளையும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.