புகையிரத பாதையில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு
அம்பேபுஸ்ஸ மற்றும் போதலே ஆகிய இரண்டு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான குறுகிய புகையிரத பாதையின் ஓரத்தில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓரளவு வயதான தோற்றமுடைய இருவரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன எனவும் உயிரிழந்த இருவரும் சாரம் மற்றும் சேர்ட் அணிந்திருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறுகிய புகையிரத பாதையின் ஓரத்தில் நின்றிருந்த போது புகையிரதத்தில் மோதுண்டனரா அல்லது புகையிரதம் ஒன்றிலிருந்து வீழ்ந்தார்களா என்பது தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சடலங்களும் மீரிகம வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன்,
சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.