ஒரே வீட்டில் அடுத்தடுத்து நேர்ந்த விபரீதம்: குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்
17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டதையடுத்து சிறுமியின் தந்தையார் காலையில் வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் இன்று(09) காலையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
களுவங்கேணி முதலாம் பிரிவு அக்கரைவீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷ்கா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் ஆகியோரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில் சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்பவதினமான நேற்று மாலை வீட்டில் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து சிறுமி தற்கொலைக்குக் தந்தையார் காரணம் என அந்தப்பகுதி அயலவர்கள் பேசத்தொடங்கியதையடுத்து சிறுமியின் தந்தையார் இன்று காலையில் வீட்டின் அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு சடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான
நீதிமன்ற அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன்,
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri