நடுவானில் பறந்த விமானத்தில் பணத்தை இழந்த தேரர்: அதிரடியாக கைது செய்யப்பட்ட சீனர்கள்
விமானத்தில் தேரரின் கையில் இருந்து 4 லட்சத்து 93 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை திருடிய இரண்டு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, பேராதெனியாவில் உள்ள விகாரையிலுள்ள தேரர் நேற்று (25) காலை 10.05 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் EY-392 விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.

இரண்டு சீன பிரஜைகளும் கைது
குறித்த விமானம் கட்டுநாயக்க நோக்கி பறந்து கொண்டிருந்தபோது, அவர் கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
இதன்போது அதே விமானத்தில் இருந்த இரண்டு சீன பிரஜைகள் அவரது இருக்கையை நெருங்கி, பையிலிருந்து பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர்.
இதனைடுத்து தேரர் விமான அதிகாரிகளிடம் முறையிட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இரண்டு சீன பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |