தலதா மாளிகைக்கு மேல் பறந்த ட்ரோன் கேமரா! வெளிநாட்டவர் இருவர் கைது
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் உள்ள கண்டி பாதுகாப்பு வலயத்தில் உரிய அனுமதியின்றி, ட்ரோன் கேமரா பறக்கவிட்ட சீன பிரஜைகள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சீனப் பிரஜைகள் இருவரும் இன்று(08.05.2023) காலை 7:00 மணியளவில் ட்ரோன் கேமராவை பறக்கவிட முயன்றதாக சந்தேகத்தின் பேரில் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை
இதேவேளை ட்ரோன் கேமராவை கண்டி பிரிவு தொழில்நுட்ப பிரிவுக்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக்கொள்ளவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் சீன பிரஜைகள் இருவரிடமும் வாக்கு மூலங்களை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸாரின் சுற்றுலா பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
you may like this Video