கடும் குளிரால் இரு குழந்தைகள் உயிரிழப்பு
திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பேறாறு பிரதேசம் மற்றும் கந்தளாய் ராஜாறு பிரதேசங்களில் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு ஆண் பிள்ளைகள் உயிரிழந்துள்ளன.
இரண்டு மாத குழந்தை நுரையீரல் நோய் காரணமாக சிகிச்சை பெற்ற குழந்தை
3 வயதான சிறுவனும் பிறந்து இரண்டு மாதங்களான ஆண் குழந்தையும் இவ்வாறு உயிரிழந்திருப்பதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இரண்டு மாத குழந்தை இதற்கு முன்னர் நுரையீரல் நோய் பாதிப்பால், திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக மரணம் சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள மருத்துவர் மாதவ தர்மதாச கூறியுள்ளார்.
அதேவேளை நாட்டில் நிலவும் கடும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக குழந்தைகளை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவமானது என சிறுவர் நோய் தொடர்பான சிறப்பு மருத்துவர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.
குழந்தைகளை குளிரில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு கனமான ஆடைகளை அணிவித்து, காலுக்கு காலுறைகளை அணிவிக்க வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 21 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
