மட்டக்களப்பில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகள்: சிறுவர்கள் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் ஒருவாரத்தில் 3 சிறுமிகள் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 13¸17 வயதுகளுடைய இரு சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் இரு ஆண் சிறுவர்களை கைது செய்துள்ளதாகவும் அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாவட்டத்திலுள்ள ஒரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் வாந்தியெடுத்த 17 வயது சிறுமி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.
நீதிமன்றில் முன்னிலை
இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த சிறுமியின் தாயர் தந்தையர்கள் கடற்றொழிலுக்காக கடற்கரை பகுதியில் மீன் வாடியில் இருந்து வருவதாகவும் வீட்டில் குறித்த சிறுமியும் அவரது சகோதரரும் தங்கியிருந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 3 மாத்திற்கு முன்னர் சம்பவதினம் குறித்த சிறுமி வீட்டிற்கு இரவு வீதியால் நடந்து வரும் போது இருட்டில் வந்த ஒருவன் தன்னை இழுத்துச் சென்று வன்புணர்வு செய்ததாகவும் அவனை அடையாளம் தெரியாது என கூறியதாகவும் பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
அதேவேளை குறித்த அதே பொலிஸ் பிரிவில் 13 வயது சிறுமி ஒருவரை 3 மாத கர்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்தனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட சிறுவன் நான் இதற்கு காரணம் இல்லை எனது நண்பன் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ள நிலையில் குறித்த சிறுமி இல்லை இவன்தான் காரணம் என முறைப்பாட்டில் தெரிவித்ததையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தியதை அடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மாவட்டதிலுள்ள இன்னொரு பொலிஸ் நிலைய பிரிவின் கீழ் உள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதை அடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இவ்வாறு ஒரு வாரத்தில் 3 சிறுமிகள் மாவட்டத்தில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam