வடக்கு நோக்கி பயணித்த இரு பேருந்துகள் மீது தாக்குதல்(Photos)
கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி பயணித்த இரு பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனுராதபுரம் - நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புத்தளம் - கொழும்பு வீதியில் வைத்தே நேற்று(28.11.2023) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கற்களை வீசி தாக்குதல்
கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி இரவில் பயணித்த தனியார் மற்றும் அரச பேருந்துகள் மீது மோட்டார் வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வடக்கிலிருந்து கொழும்பில் நடைபெற்ற சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கங்களின் தேசிய மாநாட்டில் பங்குபற்றிவிட்டு திரும்பிய வவுனியாவை சேர்ந்த இரு தனியார் பேருந்துகளில் ஒரு பேருந்தும் , யாழ் நோக்கி பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பேருந்துமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
[PKQT1QU ]






புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
