இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு கொடூர கொலைகள்!
நாவலப்பிட்டி மற்றும் ஹபரணை பிரதேசத்தில் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி, இங்குருஓயா வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் படுகாயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த தம்பதிகள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பழைய முன்விரோதம்
குறித்த தம்பதிகளில் ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பழைய முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன், கொலையை செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 48 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு
இதேவேளை ஹபரணை சேனாதிரியாகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் மனைவியின் தந்தை இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கெட்டஹெத்த ஹிங்குரஹேன பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் என்பதுடன் கொலையை செய்த சந்தேக நபரும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.