நான்கு பிள்ளைகளிள் தந்தை கொடூரமாக கொலை
அனுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூரிய ஆயுதத்தால் கழுத்துப் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
35 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான உதித்த எரன்ன ஜயதிலக்க என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு குழுக்களுக்கு இடையில் தகராறு
இவர் லோலுகஸ்வெவ பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் நேற்று இரவு மனைவியின் வீட்டில் தங்கியிருந்ததுடன், தனக்கு வந்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் வீட்டை விட்டு வெளியேறிய சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற தகராறே குறித்த கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சில சந்தேகநபர்கள் குறித்த பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.