பிரித்தானியாவில் மர்ம கும்பலொன்றில் கொடூர தாக்குதலில் பலியான சிறுவர்கள்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
பிரித்தானியாவில் மர்ம கும்பலொன்றினால் இன்று மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில், Brentwood நகரத்தில் உள்ள Regency Court பகுதியில் மர்ம கும்பலொன்றினால் 3 பேர் கொடூரமாக தாக்கப்பட்டு ஆபத்தில் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அவரச உதவிகளுடன் சென்ற பொலிஸார், பாதிக்கப்பட்ட்டவர்களை காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர்களில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மற்றுமொரு சிறுவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தினை தொடர்ந்து குறித்த வீதியினை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 8 பேரை கைது செய்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மற்றும் புலனாய்வாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும்,மத்திய பிரென்ட்வுட்டில் உள்ள ரீஜென்சி கோர்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளிலும் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை சந்தேகத்தின் படி எதையும் பார்த்தவர்கள் முன்வந்து தகவல் வழங்குமாறு துப்பறியும் தலைமை ஆய்வாளர் ஆண்டி கிளார்க்சன் (Andy Clarkson) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan