புது வருடத்திற்காக சீனவெடி கொளுத்தி விளையாடிய இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்
திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்தில் புது வருடத்திற்காக சீனவெடி கொளுத்தி விளையாடிய இரு சிறுவர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில் காயமடைந்த சிறுவர்கள் மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 9 வயது மற்றும் 11 வயது உடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.
2021ஆம் ஆண்டை வரவேற்கும் முகமாக சீன வெடிகளை கொளுத்தி கொண்டிருந்த வேளையில் தீ கையில் பட்டதால் இரு சிறுவர்களும் காயங்களுக்கு இலக்காகி மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதேவேளை மது போதையில் மோட்டார்சைக்கிளில் பயணித்த கோமரங்கடவல - ரிதீபுர பகுதியைச் சேர்ந்த இருவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு இலக்காகியுள்ளனர்.
காயமடைந்த குறித்த இருவரும் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 32 மற்றும் 34 வயது உடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam