வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது
வவுனியாவில் இரு இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, தேணிக்கல் பகுதியில் கடந்த வாரம் வயது போன ஒரு முதியவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து பயணித்த இளைஞர்கள் இருவர் அவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துச் சென்றனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முதியவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, தோணிக்கல் மற்றும் சிறிராமபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 25 ஆகிய வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளதுடன், பசார் வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில் 6 அரைப் பவுண் சங்கிலியையும் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 11 மணி நேரம் முன்
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam