திருகோணமலையில் இரு நூல்களின் அறிமுக விழா..!
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின், இரு நூல்களின் அறிமுக விழா இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின், கிழக்கின் 100 சிறுகதைகள் இரண்டினதும் தொகுப்பும் மற்றும் கிழக்கின் கவிக்கோர்வை தொகுப்பு ஆகிய இரு நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அறிமுக விழா இன்று (11-06-2025) புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கின் 100 சிறுகதைகள் இரண்டினது நூலின் அறிமுகத்தினை எமுத்தாளர் க.யோகானந்தனும், கிழக்கின் கவிக்கோர்வை நூலின் அறிமுகத்தினை கவிஞர். மாயன். இ. ஸ்ரீஞானேஸ்வரனும் வழங்க, எமுத்தாளர்களுக்கு பணிப்பாளரினால் நூலின் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கிழக்கின் 100 சிறுகதைகள் இரண்டினதும், 332 கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞர்களது கவிக்கோர்வை கவிதைத்தொகுப்பையும் வெளியீட்டத்தில் கிழக்கு மாகாணம் பெருமை கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.










ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
