நீர்கொழும்பு பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்பு!
நீர்கொழும்பு குடபடுவ பிரதேசத்திலும் நீதிமன்ற வீதியிலும் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குடபடுவ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 65 வயதுடைய நபருடையது என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 4 அடி மற்றும் 6 அங்குல உயரம் கொண்டவர் என்று நம்பப்படுகிறது. இதேவேளை, நீர்கொழும்பு நீதிமன்ற வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 75 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் 4 அடி மற்றும் 5 அங்குல உயரம் கொண்டவர் என நம்பப்படுவதாகவும், கடைசியாக வெள்ளை நிற சாரம் மற்றும் வெள்ளை நீண்ட கை சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 14 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan