இரண்டு வாள்களுடன் இருவர் கைது(Photo)
கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் இரண்டு வாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
சிறப்பு அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட
நீதிமன்றில் முறைப்படுத்தப்படவுள்ளதாகத் தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
