கந்தளாயில் 783 லீட்டர் டீசலுடன் இருவர் கைது(Photo)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 783 லீட்டர் டீசலுடன் இருவரை நேற்றிரவு(31) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய், வென்ராசன்புர பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது சம்பவம்

சந்தேகநபர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இரண்டு பரல்களில் மறைத்து வைத்திருந்த நிலையிலே 783 லீட்டர் டீசலை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமையவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கந்தளாய்
நீதிமன்ற நீதிவான் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
Bigg Boss: உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? மைக்கை மறைத்து பண்ணாதீங்கனு... கொந்தளித்த பிக்பாஸ் Manithan
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri