நெத்தலியாற்றுப் பகுதியில் கொடாவுடன் இருவர் கைது(Photo)
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலியாற்றுப் பகுதியில் கோடா மற்றும் கசப்புடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலியாற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாகத் தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சதுரங்கக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.
இதன்போது 305லீற்றர் கோடா மற்றும் 65 லிட்டர் கசிப்புடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட
சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளனர் எனத் தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க
தெரிவித்துள்ளார்.






குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam
