வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
வவுனியாவில் (Vavuniya) 28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று (10.07.2024) நள்ளிரவு 1.30 மணியளவில் வவுனியா நகரில் வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து, மன்னார் பகுதியில் இருந்து
கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட கூலர் ரக வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
பறிமுதல்
இதன்போது, 28 கிலோ 750 கிராம் கேரள கஞ்சாவை வவுனியா பொலிஸார் பறிமுதல் செய்ததுடன், மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில்
முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam