யாழில் போக்குவரத்து பொலிஸாரால் உயிரிழந்த மின்சாரசபை ஊழியர் : பிரதான சாட்சி வாக்குமூலம்
யாழ்ப்பாண (Jaffna) மின்சார சபை ஊழியரான செல்வநாயகம் பிரதீபன் உயிரிழக்க போக்குவரத்து பொலிஸாரின் செயற்பாடே காரணம் என வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி ஒருவர் 2 மாதங்களின் பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
முன்னதாக யாழ் பலாலி பிரதான வீதியின் ஆயகடதை கடந்த மே 10ஆம் திகதி இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது.
எனினும், சாட்சி வழங்குவதற்கு பயந்த நிலையில் தாமாக முன்வந்து குறித்த பொதுமகன் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே துணிந்து வந்து இந்த வாக்குமூலத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
சோதனை நடவடிக்கை
குறித்த சாட்சி, யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் ஊடாக முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பொழுது, வீதியின் வலது பக்கம் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் இடது பக்கமாக பயணித்த சிலரை மறித்து சோதனை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது உயிரிழந்தவரையும் பொலிஸ் மறித்த பொழுது அவர் நிற்காமல் சென்றுள்ளார்.
இதனை அடுத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்து பின்னால் துரத்திச் சென்று, வடக்கு புன்னாலைக் கட்டுவன் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வைத்த குறித்த மோட்டார் சைக்கிளை வலது காலால் உதைத்தார்,
வைத்தியசாலையில் அனுமதிக்க மறுப்பு
இதன் போது பாதிக்கப்பட்டவர் மின்சார கம்பத்தில் மோதுண்டார்.
அவரை எடுத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதிக்க நாங்கள் முயற்சி செய்த பொழுதும் அவரை உதைந்து விழுத்திய பலாலி போக்குவரத்து பொலிஸார் அனுமதிக்கவில்லை.
எனினும், அவரை வைத்தியசாலையில் உடனடியாக அனுமதித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என அவர் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |