திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் 1.6 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புல்மோட்டை அரிசி மலை பகுதியை பார்வையிடுவதற்காக வருகை தந்தவர் போல் நடித்த சந்தேகநபர்களை சுனாமி கம்மான பகுதியில் வைத்து சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஓட்டமாவடி - மீராவோடை பகுதியைச் சேர்ந்த செய்யான் அஹமட் சியான், பதுருதீன் முபாரக் (43 வயது) என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் அவர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri