டுபாயிலிருந்து வந்திறங்கிய இருவர் விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமான முறையில், வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த இரு இலங்கை பயணிகள் இரு இலங்கை பயணிகள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியாக கடத்திச்செல்ல முயன்றபோது இன்று வெள்ளிக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க அதிகாரிகளால் விசாரணை
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும், மற்றையவர் கல்முனைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று (27) அதிகாலை 12.00 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK -648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 86,800 வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கொண்ட 434 சிகரெட் கார்டூன்களும் 30 மின்னணு சிகரெட்டுகளும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri