அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
அம்பாறையில் (Ampara) ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக பயன்படுத்தி விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தாளவட்டுவான் சந்தி அருகில் நேற்று (07.06.2024) இரவு சந்தேகத்திற்கிடமாக இருவர் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் குறித்த இருவரையும் சோதனை மேற்கொண்டனர்.
மேலதிக விசாரணை
இதன்போது தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துநர்கள் என அடையாளம் காணப்பட்ட இவ்விரு சந்தேக நபர்கள் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த இரு சந்தேகநபர்களிடம் இருந்தும் 3300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரு சந்தேக நபர்களும் 32 மற்றும் 37 வயது மதிக்கத்தக்க மத்திய முகாம் பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
