கல்முனையில் வெளிநாட்டு சிகரெட் பைக்கெற்றுக்களுடன் இருவர் கைது
சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (3) அதிகாலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு்ளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல இலட்சம் ரூபாய் பெறுமதி
குறித்த நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள், கல்முனை பகுதியில் உள்ள பாதணிகள் விற்கின்ற கடை ஒன்றிற்கு கடத்த முற்பட்ட வேளை இடம்பெற்றுள்ளது.
இதன் போது முச்சக்கரவண்டியில் பயணம் செய்த கல்முனை கடற்கரைப் பள்ளி வீதி ஆட்டோ பசார் சந்தி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய சந்தேக நபர் உட்பட மருதமுனை ஹாஜியார் வீதி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய சந்தேக நபரையும் விசேட அதிரடிப்படையினர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான இரு சந்தேக நபர்களும் முச்சக்கரவண்டி ஊடாக பயணப் பொதிகளில் 20200 சிகரெட்டுகளை எடுத்து செல்லும் போது கைதாகியுள்ளதுடன் அதன் பெறுமதி பல இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கைதான சந்தேக நபர்கள் சான்றுப் பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |