மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது
மட்டக்களப்பு (Batticaloa) - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14,570 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று (30.04.2024) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி மையவாடி வீதி மற்றும் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதேசங்களை சேர்ந்த நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளின் கீழ்ப்பகுதியில் மறைத்து வைத்து மேற்படி ஐஸ் போதைப்பொருள் எடுத்துவரப்பட்ட நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரபல மென் பானம் ஒன்றின் காத்தான்குடி பிரதேச முகவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
