போதை மாத்திரைகள் மற்றும் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருகன் கோவிலடி இலிங்க நகர் பிரதேசத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கேரள கஞ்சாவுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை சர்தாபுர விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று (03) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவ்வாறு இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1500க்கும் மேற்பட்ட போதை மாத்திரை விலைகள் மற்றும் 700 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது உடைய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
காங்கேசன்துறை
கீரிமலை பகுதியில் இன்று (04) காங்கேசன்துறை பொலிஸாரினால் 54 கால் சாராய போத்தல்களுடன் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் பிரதி பொலிஸ் பொறுப்பதிகாரி உதயானந்தன் அவர்களது தலைமையின் கீழ் சென்ற பொலிஸ் குழாமின் விசேட சுற்றிவளைப்பின் கீழ் பதுங்கு குழியில் இருந்து இந்த சாராயப் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சாராயப் போத்தல்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான செயற்பாடுகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நபர் ஒருவரை இன்று(4) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுமேதகம,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்தில் ஹேரொயின் போதைப்பொரு விற்பனை செய்வது மற்றும் பாவிப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் ஹேரொயின் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஐந்து தடவைகள் சிறைவாசம் சென்று வந்தவர் எனவும் சந்தேக நபர் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செய்திகள் : எப்.முபாரக்



