போதைப்பொருளுடன் இருவர் கைது(Photos)
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகாநந்தா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 2 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ள கஞ்சா பொதி 2 கிலோ மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இதன்போது, வீட்டிலிருந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி 57வது படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் மற்றும் 573 வது படைகளின் கட்டளை அதிகாரி 573 பிரிக்கேடியர் பிரசன்னா ஆகியோரின் வழிநடத்தலில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
இரவு முழுவதும் விடிய விடிய கதறி அழுதுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியா... அப்படி என்ன நடந்தது? Cineulagam