கேரளா கஞ்சாவுடன் கடற்படையினரால் இருவர் கைது
கடற்படையினரால் தொண்டைமானாறு பிரதேசத்திலிருந்து மாமுனை வரையான கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 109 கிலோ 150 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை P 177 கடலோர பாதுகாப்பு கப்பல் மூலம் தொண்டைமானாறு முதல் மாமுனை கடற்கரையில் நேற்றைய தினம் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த இரண்டு சந்தேகநபர்கள், 2 பொதிகளில் அடைக்கப்பட்ட கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவற்றைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பகுதியில் P015 கடலோர பாதுகாப்பு ரோந்துப் படையினர் நடாத்திய மேலதிக தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட கேரளா கஞ்சா பலரையும் மீட்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மொத்தமாக 109 கிலோகிராம் மற்றும் 150 கிலோகிராம் கேரள கஞ்சாவைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நடவடிக்கையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ரூ. 32 மில்லியனுக்கும் அதிகமெனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 26 மற்றும் 28 வயதுடைய பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றிய பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam