ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுக்க உதவிய இருவர் கைது
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு தொலைபேசி ஊடாக கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெறுவதற்கு உதவிய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமக்கு தொலைபேசி ஊடாக அழைத்து 15 இலட்சம் ரூபா கப்பம் வழங்குமாறு கோரி , மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையிலே குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
சந்தேகநபர்கள் இருவரும் 38 மற்றும் 40 வயதுடையவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான சந்தேகநபருக்கு தம்புள்ளை, பல்வெஹெரவில் உள்ள பொலிஸாரைத் தலைமறைவாகச் செய்வதற்கு உதவி செய்தமை மற்றும் பிரதான சந்தேகநபருக்கு தங்குமிட வசதிகளை வழங்கியமைக்காக இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam
