தேசப்பந்துவை தாக்கிய இருவருக்கும் விளக்கமறியல்!
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும்; நாளை (மே 12) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும்; கொள்ளுப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்
கொழும்பு, பெரஹெர மாவத்தையில் குழு ஒன்றினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபமடைந்த குழு, உயர் போலீஸ் அதிகாரியின் வாகனத்தையும் தாக்கி சேதப்படுத்தியது.
இந்த சம்பவத்தின் காட்சிகளின்படி, பலர் பொலிஸ் அதிகாரியை சுற்றி வளைத்து, பொல்லுகள், தடிகள் மற்றும் பிற பொருட்களால் தாக்குவதை தெளிவாக காட்டின.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது தேசபந்து தென்னகோன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காகவே அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
