மடுவில் விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைப்பு
மடு, பண்டிவிரிச்சான் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் விசேட சுற்றி வளைப்பின் போது இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மடு பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, மடுகந்தைப் பகுதியில் உள்ள விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படைக் கொமாண்டர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர அவர்களின் நெறிப்படுத்தலில், விசேட அதிரடிப் படையின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கொடித்துவக்கு அவர்களின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் மடு, பண்டிவிரிச்சான் பிரதேசத்தில் திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, காட்டுப் பகுதியில் 1000 லீட்டர் கோடா மற்றும் 35 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், மீட்கப்பட்ட பொருட்களுடன் மடு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரகைளை மடுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan