வவுனியாவில் வாள்களுடன் அட்டகாசம் செய்த இருவர் கைது!
வவுனியாவில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தின் முன்நின்ற இளைஞர்கள் மீது புதன்கிழமை மாலை வாள் வீசி சிலர் அட்டகாசம் செய்துள்ளனர்.
இதன்போது நிலமையை கட்டுப்படுத்த முயன்ற புலனாய்வு துறையைச் சேர்ந்த ஒருவர் மீதும் வாள் வீசி தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றதும் வாள்களுடன் நின்றவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

பொலிஸார் விசாரணை
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் களமிறங்கிய விசேட அதிரடிப்படையினர் சம்பவத்துடன் தொடர்புடைய தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்து வவுனியா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மற்றுமொரு நபர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, விசேட அதிரடிப்படையினர் வவுனியா வைவரவபுளியங்குளம் பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam