சட்டவிரோதமாக சங்குகளை புதைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது (Photos)
புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக சங்குகளை புதைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (21.06.2023) கற்பிட்டி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு சங்குகளை புதைத்து வைத்திருப்பதாக கற்பிட்டி பொலிஸ் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய அப்பகுதியின் வீட்டில் வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
7 இலட்சம் ரூபா பெறுமதி
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சங்குகள் சுமார் 7 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட சங்குகளையும் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |